Planned intervention: On Wednesday April 3rd 05:30 UTC Zenodo will be unavailable for up to 2-10 minutes to perform a storage cluster upgrade.
Published October 16, 2020 | Version v1
Book Open

கரிகால் வளவன்

Description

சோழர்களுடைய சரித்திரம் நீண்டது; விரிந்தது; சுவை நிரம்பியது. சரித்திர காலத்துக்கு முன் இருந்த சோழர்களின் வரலாற்றைப் பழந்தமிழ் இலக்கியங்களின் துணை கொண்டு ஒருவாறு உருவாக்கலாம். அந்த பழஞ் சோழர்களுக்குள் இணையின்றி வாழ்ந்தவன் கரிகால் வளவன். அவனுடைய வரலாற்றைக் கதை போல விரித்து எழுதிய புத்தகம் இது.

ஆராய்ச்சி முறையில் இன்ன இன்ன நிகழ்ச்சிக்கு இன்ன இன்னது ஆதாரம் என்று சொல்லாமல், இலக்கிய ஆதாரங்களையெல்லாம் தொகுத்து அவற்றிலுள்ள செய்திகளை ஒருவாறு கோவைப்படுத்திக் கற்பனையென்னும் பசையால் இணைத்து உருவாக்கியது இவ்வரலாறு. நிகழ்ச்சிகளினூடே உள்ள உணர்ச்சியை வெளிப்படுத்த வருணனைகளையும், உரையாடல்களையும் இடையிடையே அமைத்திருக்கிறேன். புத்தகத்தைப் படித்த பிறகு, ஒரு பேரரசனுடைய வரலாற்றை உணர்ச்சியோடு தெரிந்து கொண்டோம் என்ற திருப்தி நிலவவேண்டும் என்பதே என் கருத்து. அதோடு படித்துச் செல்லும் பொழுதே கதையை நாம் ஒட்டாமல் அது நம்மை ஒட்டவேண்டும் என்ற நினைவால் கதைக்குரிய கருவை விரித்துச் சொல்லியிருக்கிறேன்.

கரிகாலனுடைய வரலாற்றைத் தெரிந்து கொள்ளச் சிறந்த ஆதாரமாக இருப்பவை பொருநராற்றுப்படையும், பட்டினப் பாலையும் ஆகும். புறநானூற்றில் உள்ள பாடல்கள் சில கரிகாலனை நேர்முகமாகப் பாடுகின்றன. மற்றத் தொகை நூல்களில் அங்கங்கே உவமையாகவும் பிறவாறாகவும் கரிகாலனைப் பற்றிய செய்திகள் துண்டு துண்டாகக் கிடைக்கின்றன. சிலப்பதிகாரத்தில் சில செய்திகள் இருக்கின்றன. இவற்றை யெல்லாம் படித்துத் தொகுத்து இதை உருவாக்கி அமைத்தேன்.

கி. வா. ஜகந்நாதன்

Files

cover.jpg

Files (2.7 MB)

Name Size Download all
md5:61ff5fcf05461ee09bb07480d16a15ea
753.6 kB Preview Download
md5:d03f96e12db6019efbe05b17134d3947
814.5 kB Download
md5:faf4ac28737fc323fbeb3244648df019
281.0 kB Preview Download
md5:f4b778e3a6bf8430d914b7724359c929
886.7 kB Download